ஒரு அமுத ஊற்று
நிலவில் குளித்து சோலை புகுந்து
மலர்கள் தரித்து - சந்தனம் அணிந்த சீதளக் குரலே..!
உலகை மறந்து எங்கள் உயிர்கள்
ஆன்மாவை உணர்வது உன் கீதங்களில் மட்டுமே..!
பாறைகள் கூட பனியாய் உருகும்
உன் பக்குவக் குரலில் இதயங்கள்
இதமாய் நெருடப்படும்..!
உன் கானம் கேட்கும் கோடை மேகம்
ச்ந்தனச் சூலில் சாறல் பொழியும்..!
உன் தொனியின் துடிப்பில் நாதம் வந்து நர்த்தனம் செய்யும்..!
பல்லவியுடன் சரணங்கள் வந்து
சொர்க்கக் குரலில் சங்கமமாகும்..!
உன் அமிர்த வர்ஸணிக்கு ஆகாயம் மட்டுமல்ல
எங்கள் இதயங்களும் அன்பினைப் பொழ்யும்..!
சங்கீதங்களைச் ச்ந்தித்து சப்தித்து வந்த
உன் சாரீரம் இப்பொழுது
அனுதினமும் இல்லங்களில் அமைதியான இரவுகளில்
சின்னத்திரை தொடர்களிலே தவழ்ந்து வரும் தேன் குரலாய்
ஈரேழு ஜென்மங்ளுக்கு மலர்கள் கொண்டு மஞ்சம் விரிக்கும்..
அதில் புரளும் எங்கள்
இதயங்கள் என்றும்
உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கும்.
கோவை ரவீ

It was a very nice. All the best
Yours SP SHANMUGAM