மீண்டும் எஸ்.பி.பி. ஹீரோ

Image and video hosting by TinyPic

நன்றி: தினகரன் நாளிதழ், 19.04.2007 (வியாழக்கிழமை)

சென்னை ஏப். 19 பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். 'கேளடி கண்மணி',

'சிகரம்' படங்களில் ஹீரோவாக நடித்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ' மனதில் உறுதி வேண்டும்', 'காதலன்'

போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். சில காலம் படங்களீல் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது

மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தெலுங்கில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற 'கண்டே கூத்திரனே கணாலி' என்ற

படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. சாய் பிரகாஷ் இயக்க, கே.எஸ்.ஆர்.தாஸ் தயரிக்கிறார். இதில்

எஸ்.பி.பி. கதாநாயனாக நடிக்கிறார். தெலுங்கில் தாசரி நாராயணராவ் நடித்த வேடத்தை அவர் ஏற்றிருக்கிறார்.

பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

என்றார் எஸ்.பி.பி இதில் அவருக்கு ஜோடியாக லட்சுமி நடிக்கிறார். இளம் ஜோடியாக அஜெய், ரேகா
நடிக்கின்றனர்.