Search blog.co.uk

Archives for: May 2007

பொல்லாதவன் ரீமிக்ஸ் பாடல்

by covairavee @ 2007-05-23 - 09:10:29

பொல்லாதவன் படத்தில் எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ் பாடல் டாக்டர். எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

"பொல்லாதவன்" படத்துக்காக மூப்பது வருடத்துக்கு முன் வந்து பிரபலமான "எங்கேயும் எப்போதும்" பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பிரபல மலேசிய பாப் பாடகர் யோகி பாடியுள்ளார்.

க்ரூப் கம்பெனி சார்பில் கதிரேசன் தயாரிக்கும் ப்டம் "பொல்லாதவன்" வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ். காஜல் அகர்வால் நடிக்கின்றனர். இப்படத்தின் 60 சதவீகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 30 வருடங்களுக்கு முன் ரஜினி, கமல் நடித்த "நினைத்தாலே இனிக்கும்" படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான பாடல் "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்" பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இப்பாடல் இப்படத்துக்காக ரிமிக்ஸ் செய்யப்படுகிறது. இப்பாடலை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து மலேசியா 'பாப்' பாடகர் யோகி, பாடகி சுனிதா ஆகியோர் இப்போது இப்பாடலை பாடியுள்ளார். இதற்காக சென்னையில் 23 நாட்கள் ஒலிப்பதிவு நடந்தது.

நன்றி: தினகரன், 23.05.2007


 
 

Footer

The content of this website belongs to a private person, blog.co.uk is not responsible for the content of this website.